EIN Presswire | Newsmatics

மாவீரர்களின் கனவுகளை சுமந்து அமெரிக்கா நியுயோக் நகரில் கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு.

New York Parliament Sitting

New York Parliament Sitting

இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் ஈழத்தமிழர்கள் பங்காளிகளாக மாறவேண்டும்-பிரதமர் விசுவநாதன்உருத்திரகுமாரன்

தமிழ்த்தேசியப் பிரச்சனையை BRICS (Brazil, Russia. India, China and South Africa) அமைப்பிற்கும். சீனாவிற்கும்தெரியப்படுத்துவது தொடர்பான கரூத்துக்கள் பேசப்பட்டன.”
— Transnational Government of Tamil Eelam (TGTE)
NEW YORK CITY, UNITED STATES, May 26, 2023/EINPresswire.com/ --

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9வது அரசவை அமர்வு மே மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் அமெரிக்கா நியுயோக் நகரில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நடைபெற்று அதனை அடுத்து வருகின்ற வாரஇறுதி நாட்களிலும் அதே போல தமிழீழ மக்களின் விடிவிற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியபுனிதர்களை நினைவுகூறுகின்ற நாளினை அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களிலும் அனைத்து நாடுகளிலும்உள்ள அரசவை உறுப்பினர்கள் ஒன்றாக அரசவையை கூட்டி உறுதியேற்புடன் தாயகம் நோக்கிய பணிகளைமுன்னெடுப்பது வழமை,

அதற்கமைய வலிசுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை மனதிலிருத்தி கூடிய அரசவையின் தொடக்கநாள்நிகழ்வுகள் நியூயோர்க் சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் (New York City Bar Association)இடம்பெற்றிருந்தது.

இதில் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், இறைமையும், சுதந்திரமும் கொண்டதமிழீழத்தை அமைப்பதற்கான உலகத்தமிழர்களின் வகிபாகம் ஆகியன கருப் பொருட்களாக எடுக்கப்பட்டன. கட்டுமான இனப்படுகொலையை(Structural Genocide) தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.

முதல் நாள் அமர்வில், தோழமை உணர்வுடன் பங்குபற்றிய ஆர்மேனிய முன்னாள் ஐ. நா சபைப் பிரதிநிதியும், தற்போதைய ஆர்மேனிய அமெரிக்க அமைப்பின் தலைவரான திரு. வன் கிரிகோரியன்(Van Krikorian) அவர்கள்ஆர்மேனிய மக்களின் மீதான இன அழிப்பிற்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கும் இடையே இருந்தஒத்தைத் தகமைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியதுடன், ஈழ மக்கள் எதிர்கொள்ளும் சிங்களத்தின்கட்டமைப்புசார் இனவழிப்பிற்கும், அஜர் பஜானில் ஆர்மேனிய மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்புசார்இனவழிப்பிற்கும் உள்ள ஒத்தைத் தகமைகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.

ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி அவர்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் எனக் குறிப்பிட்டார். தாயகத்தில் இருந்து நாடாளுமன்றஉறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணையவழி மூலம் பங்குபற்றிஉரையாற்றியதுடன், மாவை சேனாதிராஜா அவர்கள் எழுத்துமூலம் வாழ்த்துகளையும். தாயகத்தில் வேகமாகநடைபெற்றுவரும் கட்டுமான இனப்படுகொலகள் பற்றியும் சுட்டிக்காட்டி இருந்தார்கள். மேலும் தாயகத்தில்அரசியல் நடவடிக்கைகளும். புலத்தில் அரசியல் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று பலம் உள்ளதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இத்தாலியில் இருந்து “ஐரோப்பிய புதிய தலைமுறை ஒன்றியம்” ஐச் சேர்ந்த திரு.அருகன் அவர்கள் தங்களதுஅரசியல் கட்சிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெர்வித்து “நன்றிநவிலல்” பட்டயத்தை பிரதமருக்கு வழங்கினார். பிரான்ஸ்சில் இருந்து சட்டவாளர் திரு. தோமஸ் கஸ்டஜோன்(Thomas Castejon) அவர்கள் பிரான்ஸ்சில் ஈழத்தமிழர் நிலை குறித்தும், இனப் படுகொலை தொடர்பானபொறுப்புக்கூறல் குறித்தும் பேசினார். தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து திரு. அருண்குமார் அவர்கள்பரிணமித்துவரும் பல்மைய உலக ஒழுங்கில் தமிழர்களுடைய அரசியல் பெருவிருப்பிற்கு அங்கீகாரம்வழங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார். தமிழக வணிக வலைபின்னல் தலைவர் சதாசிவம் காணொளிமூலம்உரையாற்றினார். மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க தலைவர் அனன் பொன்னம்பலம், தமிழ் அமெரிக்கஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு தலைவர் மீனா இழஞ்செழியன், சங்கம் அமைப்பு சுஜாந்தி, உலகத் தமிழர்அமைப்பு ரவிக்குமார் ஆகியோர் தோழமை உணர்வுடன் உரையாற்றினார்கள்.

மேலும் கனடாப் பாராளுமன்ற உறுப்பினர் சாண் சென்(Shaun Chen) கனடாவின் எதிர்க் கட்சித் தலைவர்Pierre Poilievere,மலேசியாவில் இருந்து பேராசிரியர் ராமசாமி ஆகியோர் காணொளி மூலம் வாழ்த்துத்தெரிவித்து இருந்தார்கள்.

இரண்டாம் நாள் அமர்வில் அவைத்தலைவர் பிரதமர் ஆகியோரின் உரையுடன் ஆரம்பித்து இருந்தது. பிரதமர்தனது உரையில், இலங்கைத் தீவில் 1600 கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் 1050 கிலோ மீற்றர்கரையோரப் பகுதிகள் ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்திற்கு உரியதாக உள்ளது என்று கூறினார். மேலும், இலங்கைத் தீவில் மொத்தக் கரையோரப் பகுதிகளில் 66 வீதத்திற்கு உருத்துடையவர்களாக ஈழத் தமிழர்கள்இருந்தபோதிலும் இலங்கைத்தீவு குறித்தோ, இந்தியப் பெருங்கடல் குறித்தோ எடுக்கப்பட்ட புவிசார்அரசியல்களில் ஈழத் தமிழர்கள் பங்காளிகளாக இல்லாத நிலையை சுட்டிக்க்காட்டி இப் புவிசார் அரசியலில்எமக்குள்ள பங்கிற்காக நாம் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் தமிழர் தாயகத்தை அடையகடலில் ஈழத்தமிழர்களினது இறைமையை தமிழீழ விடுதலைப் புலிகளின் இடர்கால தன்னாட்சி அதிகார சபை(ISGA) வரைபு குறிப்பிட்டிருந்தமையையும் சுட்டிக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மேலவையும் அரசவையும் இணைந்த உரையாடல் ஆரம்பித்தது. அதில் செனட்டர்ராஜரட்னம் அவர்கள் உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், வைத்தியக் கலாநிதிஜெயலிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பிரச்சனையும். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இந்தியாவின்செல்வாக்கு(influence) குறைந்து வருவதும், தமிழர் பகுதிகளில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள்தொடர்பாகவும் பேசினார். செனட்டர் உஷா சிறீஸ்கந்தராசா தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கை ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும்நோக்கத்துடன் இடம்பெற்று வருவதை சுட்டிக் காட்டினார்.செனட்டர்வ்சத்யா சிவராமன் இன்றைய சர்வதேசஅரசியலை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் உள்ள போட்டியாக வெறுமனே கருதமுடியாது எனக்கூறினார். மேலவை உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களில் தமிழ்த்தேசியப் பிரச்சனையை BRICS ( Brazil, Russia. India, China and South Africa) அமைப்பிற்கும். சீனாவிற்கும்தெரியப்படுத்துவது தொடர்பான கரூத்துக்கள் தமிழக சட்டசபையில் பொதுவாக்கெடுப்பு தொடர்பாக மீண்டும்ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுவது பற்றி பேசப்பட்டன.

அதனத் தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது 6 மாதகாலம் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்து அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர் நேரத்தில் நடைபெற்ற உரையாடல்கள் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் பேணிவரும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்தன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் அரசவை அமர்வு நிறைவு பெற்றது.

Transnational Government of Tamil Eelam
TGTE
+ 16142023377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Instagram

NOTE: This content is not written by or endorsed by "WIVB", its advertisers, or Nexstar Media Inc.

For inquiries or corrections to Press Releases, please reach out to EIN Presswire.